Tuesday 30 October 2012

நலமா? நீ நலமா?

எங்கோ ஒரு மூலையில்...
யாருக்கோ பிறந்து...
ஏதோவொரு பெயரில்....
ஏதோவொரு வேலையில்....
எனக்காக வாழ்ந்துக்கொண்டிருக்கும் என்னவனே!
இப்போது...
உன்னலனிற்காக நானென்ன செய்வேன்
இறைவனை வேண்டுவதைத்தவிர.

விரவில் வந்துவிடு....
உன் நிழலையும் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாமல்
நானிருப்பேன்
வெளிச்சமாய் உன்னுடன் வாழ!!!


உன் கவலைகளையும், கஷ்டங்களையும்
இப்பொதே இன்முகத்துடன் அனுபவித்துவிடு.
நீயும் நானும் நாமானதும், அவையெல்லாம்
நிதானித்து ஒத்திகை பார்ப்பதற்கு கூட
உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


Saturday 27 October 2012

போட்டோஷாப்பில் எழுத்துக்களின் " Embossing Effects"



இதுபோல் உருவாக்க வேண்டுமெனில், போட்டோஷாப்பின் உதவியால் புதிதாக File ஒன்றினை Open செய்துகொள்ளுங்கள். இங்குசென்று உங்களுக்கு பிடித்தமான நிறத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள். 


அடுத்து “Alt + Delete” கொடுத்து Fill செய்து விடலாம். 
 

அடுத்து Filter -> Artistic -> Film Grain கொடுத்து ஒரு சில மாற்றங்களை செய்து பாருங்கள். தாங்கள் செய்துகொண்டிருப்பது Preview–ல் தெரியும். முடித்தவுடன் Ok கொடுத்துவிடுங்கள். 


அடுத்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஸ்டைலில் Text Type செய்து கொள்ளுங்கள்.

 
அடுத்து புதிதாக ஒரு File Open செய்து கொள்ளுங்கள். Tool Box -> Selection Tool -> சென்று Box ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள். 


அதையே “Alt” Press செய்து Duplicate எடுத்து இதையொட்டி பக்கத்தில் வைத்து நிறத்தை மாற்றி விடலாம். 


இப்போது அந்த இடத்தை தவிர மற்றவற்றை எல்லாம் “Crop” செய்து நீக்கிவிடலாம். அதற்கு இங்கே செல்லவும். “Toolbox -> Crop Tool” (Shortcut Key “C”). தேவையான இடத்தினை மட்டும் Click & Drag செய்து “Enter” கொடுத்துவிடுங்கள்.

அந்த டிசைன் மட்டும் தனியாக கிடைத்திருக்கும். Menubar -> Edit -> Define Pattern -> கொடுத்து  Close செய்து விடுங்கள். 


இனி அது தேவைப்படாது. Paint Bucket சென்று பாருங்கள். நாம் கொடுத்த டிசைனில் ஒரு Pattern Create ஆகியிருக்கும். 


இப்போது நமது File-ல் புதிதாக “Layer”  ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள்.  


“Paint Bucket Tool”  Select செய்து Fill செய்தால் அந்த Pattern-ல் File முழுவதும்  Fill ஆகிவிடும்.


அடுத்து Control “T” Press -> செய்து  வரும் Option-ல் Right Click  செய்து “Wrap Tool” என்பதை செலக்ட் செய்து தேவைக்கேற்றவாறு Bend செய்துகொள்ளலாம்.

 

 இப்போது Layer லேயே இருக்கும்போது மேலே டெக்ஸ்டிற்கு பக்கத்தில் “T” தெரிகிறதல்லவா? அங்கே “Control”  Press செய்து  Just Click செய்யவும்.


அடுத்து  Control “J” கொடுத்தால் Duplicate ஆக தேவையான எழுத்தின் அளவிற்கு மட்டும் புதிதாய் ஒரு Layer –ல் கிடைத்துவிடும். 


இப்போது மேலேயிருக்கும் Layer-ஐ  Hide  அல்லது Delete  செய்துவிடுங்கள்.
இப்போது Layer-ல் Double Click செய்து “Blending Option-> Bevel And Emboss” என்பதனை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.


இதுபோல் தேவைக்கேற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்து கொள்ளலாம். அடுத்து அதே Option–ல் “Outer Glow” என்பதனை தேர்வு செய்து Color –ஐ மாற்றிக் ஒருசில Adjustments செய்து கொள்ளலாம்.  



 இப்போது Embossing  ரெடியாகியிருக்கும்.

அடுத்து முதலில் செய்ததை போலவே புதிதாக ஒரு File Open செய்து கொள்ளுங்கள். Tool Box -> Brush Tool -> சென்று ஏதேனும் Shape  ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள். 


ஆங்காங்கே ஜஸ்ட் க்ளிக் செய்தால் போதும்.  Menubar -> Edit -> Define Brush -> கொடுத்துவிட்டால் இந்த Shape –ல் ஒரு Brush உருவாகிவிடும்.


File–ல் தேவையான இடங்களில் கிளிக் செய்து விடுங்கள். எழுத்தின்மேல் உள்ளவை தேவையில்லையென்றால் Eraser (E) கொண்டு அழித்து விடலாம்.


இப்போதும் அதேபோல் Layer-ல் Double Click செய்து “Blending Option-> Bevel And Emboss”  என்பதனை தேர்வு செய்து தேவைக்கேற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்துவிட்டால் போதும்.
 

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக கேட்கலாம் நண்பர்களே. நிச்சயம் விளக்கம் தருகிறேன். 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday 25 October 2012

அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சில ஆலோசனைகள்..!


அமைதியாய் இருங்கள்...
    ஊமையாகி விடாதீர்கள்..!

சிக்கனமாய் இருங்கள்...
   கஞ்சனாய் இராதீர்கள்...!

ஒய்வு எடுங்கள்...
    சோம்பேறியாகி விடாதீர்கள்..!

அடக்கமாய் இருங்கள்...
    அடிமையாகி விடாதீர்கள்..!

தன்னம்பிக்கையுடன் இருங்கள்...
   கர்வம் கொள்ளாதீர்கள்..!

ஆசை படுங்கள்...
    பேராசை கொள்ளாதீர்கள்..!

செலவு செய்யுங்கள்...
    ஊதாரியாகி விடாதீர்கள்..!

ஆலோசனை கூறுங்கள்...
   அடிமையாக்கி விடாதீர்கள்..!

விட்டுக் கொடுங்கள்...
    ஏமாந்து விடாதீர்கள்..!

சுறுசுறுப்பாய் இருங்கள்...
  அவசரப் படாதீர்கள்...!

பணிவுடன் இருங்கள்...
   கோழையாகி விடாதீர்கள்..!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


சிறந்த ஆயுதம்தானுண்டோ???

எதையெதையோ அழிக்க உலகில்
ஆயுதங்களும் கருவிகளும் இருக்கின்றனவே.
என்னவனே............................!
என்னை அழிக்காமல்...
உன் நினைவுகளை மட்டும் அழிக்கும்
ஏதேனும் ஆயுதம்தான் இவ்வுலகிலுண்டோ?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது கொஞ்சம் ஒவராதான் இருக்கோ?


என் மனதில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
உன் எண்ணங்களின் எண்ணிக்கையோடு
போட்டிபோடும்போது...
ஆரம்ப நிலையிலேயே தோற்று போகின்றதே
நட்சத்திர கூட்டம் கூட...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 

Monday 22 October 2012

குழந்தை வரம்

என்னை மிகவும் கவர்ந்த கவிதை.

பிள்ளை வரம் கேட்டு
கோயில் கோயிலாக ஏறி இறங்கும்
எந்த பெண்ணுக்கும் ஏன் தெரிவதில்லை...?



அம்மா வரம் கேட்டு
அனாதை இல்லதில் காத்திருக்கும்
குழந்தையின் முகம்!

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Sunday 14 October 2012

பேருந்தில் மாணவர்களின் அட்டகாசம்!


      பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வருகிறது. என்னதான் அறிவுரை கூறினாலும் அவர்கள் மாறுவதாக தெரியவில்லை. பெரும்பாலும் இதெல்லாம் காலை நேரங்களில் தான் நடக்குது. ஸ்கூல் போற மாணவர்களே (8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருப்பார்கள்) அதிகமா இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுறாங்க.

    
நிறைய மாணவர்கள் எவ்ளோதான் உள்ள இடம் இருந்தாலும் ஸ்டெப்ஸ விட்டு ஏறவே மாட்டாங்க. அது என்ன வேண்டுதலோ தெரியல. அதுல ஒரு டீம் வேற. அவங்க பேச கூடிய விஷயங்கள் கூட பக்கா லோக்கலா இருக்கும். ஒருசில வார்த்தைகளை கேட்டால் இவங்க எல்லாம் எதுக்குதான் ஸ்கூல் போறாங்களோனு கூட நினைக்கத் தோணும்.

   
காலேஜ், ஆபிஸ் போறவங்களே டீஸண்டா நடந்துகிறாங்க. ஒருசில ஆண்களைத்தவிர பெரும்பாலும் ஆண்கள் நடந்துகிற விஷயம் நம்மை நெகிழ வைக்கும். வயசானவங்களுக்காக சீட்டை விட்டுகொடுப்பதிலோ, தெரியாதவங்களுக்கு கரெக்டான ஸ்டாப் எதுன்னு சொல்றதிலோ, இறங்குறவங்களுக்காக வழி விட்டு விலகி நிற்பதிலோ டீஸண்டா நடந்துகுவாங்க. இவங்களுக்கு மத்தியில பள்ளி மாணவர்களின் அட்டூழியம் அவங்கள மிகவும் குறைத்தே மதிப்பிட தோணுது



  ஸ்டாப்ல பஸ் நிற்கும். அஞ்சு ஆறு பேர் இறங்குறத போலவே இறங்குவாங்க. ஆனா அங்கேயே தான் சுத்திட்டு இருப்பாங்க. இறங்குறவங்களுக்கு வழி விடுறதுக்காக இவங்க இறங்கி ஏறுறாங்கனா அது நிச்சயமா பாராட்டகூடிய விஷயம்.ஆனா அந்த எண்ணம் ஒரு துளி அளவு கூட அவங்க மனசுல இருக்காது. இறங்கி தூரத்துல போயி நின்னு முடியை கோதிவிட்டுட்டு ஸ்டைலா நிப்பாங்க. பஸ் ஸ்டாப்ப ஒரு சுத்து சுத்திட்டு பஸ் எடுத்ததுக்கப்புறம் திடுத்திடுனு ஓடி வந்து ஏறுவாங்க. எதுக்காக இந்த வெட்டி பந்தா? அதிலும் ஒருத்தர் மிஸ் ஆயிட்டா போதும்.. அவங்க தட்டுற தட்டுல வண்டியே உடஞ்சிரும்னுதான் தோணும்.அதிலும் அவங்க போடுற கூச்சல் வேற. அப்பப்பா காதையே கிழிக்கும். இதையெல்லாம் மத்தவங்க ரசிக்கிறாங்கனு நினைப்பாங்களோ என்னவோ? இதெல்லாம் எரிச்சலூட்டுமே தவிர ரசிக்கும்படியா இருக்காதுன்ட்ற விஷயம் இவங்களுக்கு புரிய எவ்வளவு நாளாகுமோ?. ஏகப்பட்ட ட்ராபிக்ல டிரைவர் வண்டிய பாதுகப்பா ஓட்டிட்டு வர்றதே பெரிய விஷயம். இதுல இவங்களும் கலாட்டா பண்ணிட்டு வந்தா என்ன பண்ண முடியும்? கவனத்தை சிதற விடுறதுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தர்றாங்க.
  
     
இதையெல்லாம் பார்த்தா கோபம் வராத நமக்கே பயங்கரமா ஆத்திரம் வரும். பஸ்குள்ள இருக்கிற பெரிவாங்க எல்லாம் திட்டிட்டே வர்றது அந்த மாணவர்களின் பெற்றோரைதான். இவங்களை எல்லாம் எதுக்கு ஸ்கூல்க்கு அனுப்புறாங்கனு. சொல்றத கேட்டு திருந்தக்கூடிய நிலைல அவங்க இருந்தா நிச்சயமா சொல்லலாம். ஆனா இப்படி நடந்துகிறதால என்ன ஆகும்னு தெரிஞ்சிட்டே இப்படி பண்றவங்களுக்கு நாம் என்ன சொன்னாலும் நிச்சயம் ஏத்துக்கூடிய பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லையே. கண்டிப்புடன் சொல்லி உள்ளே உரிமை இருந்தும் இதெல்லாம் கண்டும் காணாம போகிற கண்டக்டர்ஸும் இருக்கதானே செய்றாங்க? திருத்த கூடிய உரிமை இவர்களுக்குதான் இருக்கு. 1.பெற்றோர், 2. ஆசிரியர், 3. கண்டக்டர் அடுத்தது காவல்துறை. இவங்கள்ல  யாராவது எடுத்து சொன்னதான் அவங்க நல்லவிதமா நடந்துக்க வாய்ப்பிருக்கு. யாரேனும் தலையிட்டா மட்டுமே அவங்க உயிரையும், மற்றவர்களின் உயிரையும் பாதுகாக்க முடியும்.