Monday 24 December 2012

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...!

கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் இயேசுவின் பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. 

மார்ச் மாதம் 25-ம் நாள் மரியாள் கருத்தரித்ததாகவும், அதிலிருந்து 9 மாதங்கள் என கணக்கிட்டு டிசம்பர் 25-ம் நாள் இயேசு பிறந்தார் என்றும் அந்நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகின்றனர்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமானிய பேரரசன் மக்கள் தொகையை கணிக்கிட கட்டளையிட்டார். யோசேப்பும், மரியாளும் தங்களை பதிவு செய்வதற்காக பெத்லகேம் என்னும் இடத்திற்கு கழுதையில் பயணம் செய்தனர். அந்த இடத்தில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் அங்குள்ள ஒருவரின் மாட்டுத் தொழுவத்தில் தங்கினார்கள். அத்தொழுவத்திலேயே டிசம்பர் 25-ம் நாள் குழந்தை இயேசு பிறந்தார்.

ரோமானியர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் “SOL INVICTUS” எனும்  சூரியக்கடவுளின் பிறந்த நாளை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அத்திருநாளில் இயேசு பிறந்ததனால் தெய்வீகக்குழந்தையென எண்ணி அந்நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 24-ம் நாள் நள்ளிரவிலேயே ஆலயங்களில், இறைவனை வணங்கி, பாடல்களை பாடி, வானவேடிக்கை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி மகிழ்கின்றனர். 

கிறிஸ்துமஸ் தினத்தன்று புத்தாடையணிந்து, வாழ்த்து அட்டைகளை பரிமாறி, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள். ஆலையங்களிலும், வீடுகளிலும் மரத்தினை, பலூன், ரிப்பன் கட்டி வண்ணக் காகிதங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரித்து கொண்டாடுகின்றனர். பலர் குடில் அமைத்து அதில் இயேசு, மரியாள், யோசேப்பு ஆகியோரின் உருவச் சிலைகளையும், மாடு, கழுதை ஆடுகளின் உருவச் சிலைகளையும் வைத்து கொண்டாடுவர்.

இதை பற்றி கூறுவதற்கு நிறைய இருந்தாலும் நேரமின்மை  அதை தடுக்கிறது. எனவே நாம் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

5 comments:

  1. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  4. வணக்கம்
    ஆர்,வி,ராஜி
    உங்களின் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக உள்ளது பாராட்டுக்கள் உங்கள் பக்கம் வருவது ,இதுதான் முதல் தடவை நேரம் கிடைக்கும் போது நம்மபக்கமும் வாருங்கள்
    13,01,2013 இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிஉள்ளது,பார்க்கhttp://blogintamil.blogspot.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.