Thursday, 28 February 2013

வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!!

நாம் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது மிகவும், கவனத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். கண்ணில் படும் பொருளையோ அல்லது விற்பனையாளர் கூறும் பொருளையோ நன்கு விசாரிக்காமல் வாங்கிக்கொள்வது சிக்கலில் முடிந்துவிடும். கலப்படமும், ஏமாற்று வேலைகளும் பெருமளவில் நடக்கின்றன. அது சாதாரண சில்லரைக்கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை பொருந்தும்.
 
உதாரணத்திற்கு சில...
புதிதாக விற்பவர்கள் தங்களின் பொருட்களை விற்பதற்கு மிகவும் புகழ்ப்பெற்ற பெயர்களையே பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை சற்றே உயர்த்தி வைத்திருப்பார்கள். ஆனால் புதிதாய் தொடங்குபவர்கள் அப்படி செய்வது கடினம். எனவே ஏதெனும் ஒரு கடையினை தங்கள் தகுதிக்கேற்றவாறு திறந்துக்கொள்வார்கள். அந்நிறுவனங்களிலிருந்து ஒருசில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு அந்த பொருட்களுடைய Brand-ன் பெயரையோ, முத்திரையையோ தங்களின் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்வார்கள்.  அதை பார்த்ததும் வாங்க சென்றுவிடுவோம்.
நாம் போய் ஒருசில கடைகளில் குறிப்பிட்ட Brand-யை கேட்க்கும்போது அவர்கள் இப்படி கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
சார்/மேடம், நீங்க சொல்ற அந்த Product 2 நாளைக்கு முன்னாலதான் முடிஞ்சிடுச்சி. நாங்க Order பண்ணிருக்கோம். எப்போ வருதுனு தெரியல. இந்த Product எடுத்துக்கோங்க. அதுவும், இதுவும் Same Product தான். Brand Name தான் வெற.  இதனோட விலை கூட 50 ரூபாய் குறைவுதான்.என்பார்கள்.
அதை பற்றிய மதிப்பு அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் விலை மட்டும் கம்மியா இருக்கு? ஒரே Product தானே னு நாம கேட்டா,
ரெண்டும் ஒன்னுதாங்க. ஆனா அந்த Brand Name பிரபலமா  இருக்கிறதனாலதான் விலை அதிகமே தவிர வேறெதுவும் இல்ல என்று கூறுவார்கள்.
இப்படி சொல்லும்போது, யோசிக்காமல் பலர் இதை வாங்குவதுதான் இயல்பு.
ஆனால், உண்மையில் அவர்கள் விற்க நினைப்பது தங்களின் பொருட்களைதான். அந்த பொருட்களை விற்பதை போல பெயரை வைத்துக்கொண்டு இவர்களுடைய பொருட்களைதான் விற்றுக்கொண்டிருப்பார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதிக அளவில் லாபத்தையும் பெற்று, தங்கள் Brand - ன் பெயரையும் பிரபலமாகவும் ஆக்கிகொள்கிறார்கள். அவ்வாறு விற்பதற்காகதான் இது போன்ற பெயரினை பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஒரிஜினலும் இருக்கும், டூப்ளிகேட்டும் இருக்கும். பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். Guarantee, Warranty  நன்கு சரி பார்த்துக்கொள்ளுங்கள்.


இதுபோல சாதாரண மலிகைக்கடைகளில் விற்கப்படும் பொருட்களிலும் கூட கலப்படம் இருப்பதை போல ஏமாற்று வேலைகளும் இருக்கின்றன. தங்களின் சொந்த பொருளை விற்க நினைப்பவர்கள், விளம்பரமெல்லாம் செய்து அதிகமான விற்பனையில் இருக்கும் ஒரு பிரபலமான பொருளை வாங்கிக்கொள்கிறார்கள்.  விற்கும்போது, தங்களின் சொந்த பொருளுக்கும் அதன் பெயரையே பயன்படுத்தி விற்பனை செய்ய தொடங்கி விடுகிறார்கள். 
 
குறிப்பிட்ட நிறுவனத்தின் Brand என்றால் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஏதேனும் ஒரு மூலையில் அதன் பெயரையோ அல்லது லோகோ(Logo)வையோ குறிப்பிடுவது வழக்கம். சொந்தமாக விற்கும் பொருளில் அதுபோன்ற பெயரோ அல்லது லோகோவோ இருக்க கூடாது. ஆனால், ஒருசிலர் பிரபலமான Brand-ன் பெயரை பெரியதாகவும் தங்களின் பெயரை மிகச்சிறியதாகவும் போட்டுவிடுகிறார்கள். பாக்கெட்டின் கவரையும் அதெபோல் அமைத்துக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு விளம்பரங்ளில் காணப்படும் பொருட்களை போன்றே தோன்றும்.  கேட்டால் டை-அப் என்கிறார்கள். நாமும் வாங்கிவிடுவோம். அவர்களின் பொருளும் விற்பனையாகிவிடும். ஆனால் கலப்படம் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அதே சுவை இருந்தாலும், தரமும் அதே போல இருக்கும் என்பது சந்தேகமே.
 
 இது ஒருபுறம் இருக்க, நூதன முறையிலும் ஒருசில ஏமாற்று வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. ஒருசில நிறுவனங்கள் தங்களின் மென்பொருளை விற்க வேண்டுமானால் மற்ற சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று விற்பதில்லை. இவர்களிடம் வேலை பார்க்கும் நம்பகமான ஒருவரை பெரிய பெரிய கம்பெனிகளுக்கு வேலையில் மேனேஜராக அமர்த்துவதற்கு அனுப்பி விடுகின்றனர். அவருக்குத் தேவையான தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு மேனேஜராக தேர்ந்தெடுக்கபட்டுவிடுகிறார்.
எந்த நிறுவனமாக இருந்தாலும் மேனேஜரின் பேச்சுதான் நிச்சயம் எடுபடுமே. அவர் அந்நிறுவனத்தின் முதல்வரிடம் அனுமதி பெற்றால் மட்டும் போதும். அவர் நினைப்பது நடந்துவிடும். அப்பொருளை விற்பதற்காக இப்படி சொல்வார்,
"சார், நம்ம ஆபீஸ்ல Processing எல்லாம் ரொம்ப Slowவா இருக்கு. நான் சொல்ற Software போட்டுட்டா அந்த பிரச்சனையே இருக்காது. நான் இதுக்கு முன்னால இருந்த கம்பெனில அந்த Softwareதான் எல்லோரும் Use பண்றது இந்த Softwareதான். Use பண்றதுக்கு ஈஸியாவும் இருக்கும். வேகமாகவும் பண்ண முடியுது.  அதிகமான வேலையை சீக்கிரமா முடிச்சிட முடியும். அதுல எதாவது பிரச்சனை வந்தாலும் எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. பார்த்துக்கலாம் சார்
இதையெல்லாம் கேட்டவுடன் அவர் சரியென்று சம்மதித்துவிடுவார்.
அப்புறமென்ன? இவர் நினைத்தவாறு அங்கிருக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் Install செய்துவிடுவார். அனைவரும் உபயோகபடுத்த பழகிக்கொள்வார்கள். இவர் சிறிது நாட்கள் சென்றதும்.. வேறு எதேனும் காரணம் காட்டி வேலையிலிருந்து விலகி விடுவார். இப்படியும் நடக்கின்றன.
இவர்கள் அனைவருமே நல்ல பொருட்களையே விற்பதற்கு இம்முறையினை கையாண்டிருக்கலாம். ஆனால் தரமற்றவற்றை விற்பவர்களும் இதையே உபயோகிப்பதால் என்றும் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது தான் நமக்கு நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>