--> வானவில்லில் கருப்பு இல்லை. --> பாம்புக்கு காது (செவி) இல்லை. --> முதலை (ஆதி சங்கரரின் காலை பிடித்த பிராணி)க்கு நாக்கு இல்லையாம். --> முட்டையில் கொழுப்பு இல்லை. --> காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் ‘D’ இல்லை.
ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணங்களை அடியோடு மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் திரும்பி நம்மிடமே வந்துவிடும்.
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். அவர் பஸ்சில போகும்போது நெனச்சார் இன்னிக்கு எப்படியாவது டிக்கெட் வாங்காம எஸ்கேப் ஆயிடனும்னு. அதுபோலவே கண்ரக்டரும் அவர் பக்கமாய் வருவதாய் இல்லை. இவர் இறங்கபோகும் இடமும் வந்துவிட்டது. பஸ் நிறுத்துவதற்குள் வேகவேகமாக இறங்கி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். அவருடைய மனசுக்குள்ளே அப்பாடா, இன்னைக்கு எப்படியோ இரண்டு ரூபாய் மீதி பண்ணிட்டோம் என்ற திருப்தி. கொஞ்ச தூரம் போன பிறகு கையை பார்க்கிறார், கையில் வைத்திருந்த பத்து ரூபாயை காணவில்லை. பிறகுதான் தெரிந்தது, வழக்கம்போல பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் டிக்கெட்டை கிழித்து வீசும் ஞாபகத்தில் பணத்தையும் கிழித்தெறிந்து விட்டாரென்று. இரண்டு ரூபாய் ஏமாற்ற நினைத்து எட்டு ரூபாவை வீணடித்துவிட்டார்.
எப்பவோ நினைத்து எப்பவோ ஆரம்பிச்சது. எழுதத்தான் முடியல. இனிமேலாவது எழுதுவேன்னு நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் ஆரம்பம் தீபாவளி வாழ்த்துக்களோடு ஆரம்பமாகட்டும். அனைவருக்கும் எனது இனிய "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".