Monday, 8 October 2012

போட்டோ ஷாப்பில் நீர்த்துளி (Water Drops) உருவாக்குவது எப்படி?

உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு படத்தை போட்டோ ஷாப்பில் திறந்துக்கொள்ளுங்கள்.


இதற்கு ஒருசில Tools  மற்றும் Layer  தேவைப்படும்.

Menubar  ல் Window -> Tools & Window -> Layer
இவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 


நாம் குறிப்பிட்ட இடங்களை தேர்வுசெய்வதற்கு Selection Tool தேவை. அதற்கு இங்கே செல்லவும்.  இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துகொள்ளவும்.





தொடர்ச்சியாக வேணுமானால், Shift பிரஸ் செய்து Click & Drag அல்லது Menubar க்கு கீழே தோன்றும் Option -ல்


இதை கிளிக் செய்து Click & Drag செய்யும்போது தொடர்ச்சியாக அந்த Mark  தோன்றும்.



Select செய்த Area வை  "Control + J" கொடுத்தால் Duplicate ஆக கிடைத்துவிடும்.

இப்போது Effect -க்கு வருவோம்.

Menu bar -> Layer -> Layer Style -> Blending Options அல்லது Layer -ல்  Right Click செய்து Blending Options  இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றில் செல்லலாம்.


Layer மீது Double Click செய்தும் செல்லலாம். இதில் வரும் Option -ல்  Bevel & Emboss என்பதை டிக் செய்து கொள்ளுங்கள். Default ஆக இவ்வாறு தோன்றும்.


இப்போது ஒருசில மாற்றங்களை செய்து பாருங்கள். பாதியளவு Effects கிடைத்து விடும்.


இதில் கருப்பு நிறம் அதிகமாக தெரிகிறதல்லவா?
அதற்கு Highlight Mode & Shadow Mode ஐ தேவைகேற்ப Adjust  செய்து கொள்ளவும்.


இப்போது Water  Effects கிடைத்துவிட்டது.


இது உங்களுக்கு அதிகமென தோன்றினால் சற்றே குறைத்துகொள்ளலாம்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Friday, 5 October 2012

கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவு பெற...

1. மஞ்சளுடன் பால் அல்லது கடலை எண்ணெய்யை  கலந்து முகத்தில் பூசி   10 நிமிடங்கள் வரை ஊறவைத்து கழுவினால் வறண்ட சருமமும், கரும்புள்ளியும் நீங்கி முகம் பொலிவு பெறும்.

2. காரட் மற்றும் உருளைக்கிழங்கை நீர் சேர்க்காமல் பேஸ்ட் போல அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.

3. பாதாம் பருப்புடன், ரோஜா இதழ் மற்றும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்த பிறகு  சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

3. காய்ச்சி எடுத்த பாலுடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவினாலும் தேவையில்லாத கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

4. 2 தக்காளி மற்றும் 1 காரட் தினமும் காலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

5. ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து உதட்டில் தேய்த்து வர கருப்பு நிறம் குறைந்து  உதடு சிவப்பாக காணப்படும்.

6. மெழுகுவர்த்தியையும் கடலை எண்ணெய்யையும் மஞ்சளுடன் சேர்த்து காய்ச்சி எடுத்து ஒரு கையில் பிடிக்கும் அளவு சிறிய பாத்திரத்திலோ, அல்லது கப்பிலோ  உற்றிவைத்துக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் உறைந்து விடும். பார்ப்பதற்கு லிப் ஸ்டிக் போல சற்று கெட்டியாக இருக்கும்.  அதை எடுத்து சிறிதளவு முகத்திலும், கை, கால்களிலும்  தேய்த்துவிடுங்கள்.  பனிக்காலங்களில் தோன்றும் வெடிப்பு பிரச்சனை இருக்காது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Tuesday, 28 August 2012

நட்பு வேண்டும்...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க

ஒரு நட்பு...


 குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட

ஒரு நட்பு...


காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற
ஒரு நட்பு...


வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க
ஒரு நட்பு...


முதிர்ந்த பின்

அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது

தோள்களில் சாய
நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ
நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

Monday, 9 November 2009

பெயரை சொல்லவா..?

பொதுவாகவே நிறைய பேருக்கு அவங்களோட பெயரே அவங்களுக்கு பிடிக்காது. ஒருசிலருக்கு பெரிய பெயரா இருக்குன்னு கோபம் வரும். ஒருசிலர்  ரொம்ப பழைய  பெயரா இருக்கேன்னு வருத்தபடுவாங்க. (என்னுடைய பெயரும் பழசுதாங்க. என்ன பண்றது..? )  இன்னும் ஒருசிலர் பெரிய பெயரா இருந்தாலும் பரவாயில்ல. சுருக்கி கூப்பிடுற அளவுக்காவது இருக்கணும்னு சொல்லுவாங்க. அதிலும் ஒருசிலர்கிட்ட போய் உங்க பெயர் என்னன்னு தெரியாதனமா கேட்டுட்டா போதும். ஆரம்பிச்சிருவாங்க "ராஜாதி ராஜ ராஜ கம்பீர"ன்னு. அப்புறம் சொல்லுவாங்க இதுமாதிரிதான் என் பெயரும் ரொம்ப பெரியதுன்னு.

இந்த  மூன்றுகாரணங்களும் இல்லாம  நமக்குபிடிக்காதுன்னு சொல்ற பெயரெல்லாம் பொதுவா, நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களில்சிறப்பாவழாதவங்களோட  பெயரா இருக்கும். அவங்க ஏதாவது தப்பு பண்ணியிருக்கலாம். அல்லது அவர்களின் குணங்கள் சரியில்லாமல் இருந்திருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம்  இருக்கும். ஒருவர் நல்ல விதமா வாழ்ந்திடடா அவங்க பெயர் பிடிக்கும். இல்லைன்னா பிடிக்காது.

பெயர் பெரியதோ, சிறியதோ நாம நடந்துக்கிற விதத்தில்தான்அதற்கானமதிப்பேஇருக்கும்அதே மாதிரி சிறப்பா வாழ்ந்து காட்டிய நவீன ஓவியங்களின் தந்தை என வர்ணிக்கப்படுபவரின்  முழுப்பெயர்தான் இது. படிச்சு பாருங்க.

பாப்லோ டியேகோ ஜோசே பிரான்சிஸ்கோ டி பௌலா ஜூவான் நெப்போமுசெனோ மரியா டி லோஸ் ரெமெடியோஸ் சிப்பிரியானோ டி சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீஸ் பிக்காசோ
(Pablo Diego Jose Francisco de Paula Juan Nepomuceno Maria de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso) 


இவரைத்தான் நாம இந்த கடைசி வார்த்தையை மட்டும் பயன்படுத்தி ''பிக்காசோ''ன்னு அழைக்கிறோம்இவரது முழுப்பெயரை ஞாபகம் வைக்க முடியாவிட்டாலும் இவரை மறப்பது என்பது  கடினமே.

Monday, 26 October 2009

இல்லை... இல்லை.... இல்லை...

--> வானவில்லில் கருப்பு இல்லை.
--> பாம்புக்கு காது (செவி)  இல்லை.
--> முதலை (ஆதி சங்கரரின் காலை பிடித்த பிராணி)க்கு நாக்கு இல்லையாம்.
--> முட்டையில் கொழுப்பு இல்லை.
--> காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் ‘D’ இல்லை.

மன்னிக்கவும். மற்றவை எதுவும் என் நினைவில் ‘இல்லை’

Monday, 19 October 2009

ஏமாற்றாதே! ஏமாறாதே!!

ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணங்களை அடியோடு மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் திரும்பி நம்மிடமே வந்துவிடும்.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். அவர் பஸ்சில போகும்போது நெனச்சார் இன்னிக்கு எப்படியாவது டிக்கெட் வாங்காம எஸ்கேப் ஆயிடனும்னு. அதுபோலவே கண்ரக்டரும் அவர் பக்கமாய் வருவதாய் இல்லை. இவர் இறங்கபோகும் இடமும் வந்துவிட்டது. பஸ் நிறுத்துவதற்குள் வேகவேகமாக இறங்கி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். அவருடைய மனசுக்குள்ளே அப்பாடா, இன்னைக்கு எப்படியோ இரண்டு ரூபாய் மீதி பண்ணிட்டோம் என்ற திருப்தி. கொஞ்ச தூரம் போன பிறகு கையை பார்க்கிறார், கையில் வைத்திருந்த பத்து ரூபாயை காணவில்லை. பிறகுதான் தெரிந்தது, வழக்கம்போல பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் டிக்கெட்டை கிழித்து வீசும் ஞாபகத்தில் பணத்தையும் கிழித்தெறிந்து விட்டாரென்று. இரண்டு ரூபாய் ஏமாற்ற நினைத்து எட்டு ரூபாவை வீணடித்துவிட்டார்.

நல்லதே நினைத்தால், நல்லதே நடக்கும்.

Tuesday, 13 October 2009

ஆரம்பம்


எப்பவோ நினைத்து எப்பவோ ஆரம்பிச்சது. எழுதத்தான் முடியல. இனிமேலாவது எழுதுவேன்னு நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் ஆரம்பம் தீபாவளி வாழ்த்துக்களோடு ஆரம்பமாகட்டும். 
 
அனைவருக்கும் எனது இனிய "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".