Sunday, 27 January 2013

ஹார்ன் பில் பறவை ( Horn Bill Bird)

“ஹார்ன் பில்” எனும் பறவை இனம் மேற்குதொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. மிகவும் கவர்ச்சியான பறவையென கூறப்படும் இப்பறவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாகவும், பறந்து செல்லும் போது ஒரு ஹெலிகாப்ட்டர் பறப்பதைப் போலவும் தோன்றும். இறக்கைகளை அசைக்கும் ஓசை சிறிய மோட்டரின் சத்தத்தை போலிருக்கும்.  இதனாலேயே  ஹார்ன் பில் (Horn Bill) என வைத்திருப்பார்கள் போலும். இதற்கு இரண்டு வாய்கள் இருப்பதை போல தோற்றமளிக்கும். இதன் அலகுகளும், சிறகுகளும் மிகவும் சிறப்புடையவை.
 

 


 
கவர்ச்சியான வர்ண அமைப்பும் பிரம்மாண்ட உடலழகும் அனைவரையும் கவரச் செய்கிறது. இவை அடர் மஞ்சள் நிறம் அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இந்த “ஹார்ன் பில்” பறவை ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஆண்மைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக கருதப்படுகிறதாம்.
இவை புழு, பூச்சிகளையும், பழங்களில் குறிப்பாக அத்திப்பழங்கள் மற்றும் கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன. இதன் எடை சுமார் 2.5 கிலோ என்கின்றனர். இவைகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் என கூறுகின்றனர்.  இவை இணையுடன் சேர்ந்து வாழக்கூடியவை. பெண் பறவைகள் பல ஆண் பறவைகளுடன் இணை சேராமல் ஒரே ஆணுடன் மட்டுமே வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் என்பது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
 
 
இனப்பெருக்க காலங்களில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேடும். ஆனால் பெண் பறவையே கூட்டினை தேர்ந்தெடுக்கும். மரப்பொந்துகளில் கூட்டினை அமைத்துக்கொள்ளும். தாய்ப் பறவையானது மரப்பொந்துக்குள் புகுந்து ஆற்று படுகைகளில் இருந்து சேகரித்த களிமண்ணைக் கொண்டு கூட்டை உட்புறமாக கட்டும், கட்டி முடித்ததும் 2 சிறுதுளைகளை மட்டும் விட்டுவிட்டு கூட்டினை முழுவதுமாக அடைத்துவிடும். ஒருதுளையினை ஆண்பறவை உணவுகொண்டுவந்து தருவதற்கும், இரண்டாவது  துளையினை தன் கழிவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறது. பெண் பறவை உள்ளே அமர்ந்து கொண்டு தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போல அமைத்துக்கொள்ளும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவையே பெண் பறவைக்கும் உணவு கொண்டுவந்து தரும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருந்து முட்டையிட்டு அடை காக்கும். இது சுமார் 2 முட்டைகள் இடும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை எடுக்குமாம்.
 
வெளிவந்ததும் தாய்ப்பறவையானது  கூட்டினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடும். சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரையை கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் தனித்து செயல்பட குறைந்தது 2 வருடங்களாவது ஆகின்றன. 5 வருடங்களுக்கு பிறகே முழுமையான வளர்ச்சியை அடைகின்றனவாம்.
 
இத்தகைய சிறப்புடைய பறவைகள் கவர்சியாக மட்டுமல்லாமல், ஆபரணப் பொருட்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க பழங்குடியினர் பறவைகளைக் கொல்லாமல் அவை உதிர்த்த இறகுகளை மட்டுமே நடனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு அதிகம் அழிவதில்லை.
வடகிழக்கு இந்தியாவில் சிலர் இறகிற்காக வேட்டையாடினர். ஒருசில சுற்றுசூழல் ஆர்வலர்களின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இதன் தலையை வெட்டிச் சென்று சிலைகள்,  ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதற்காக அதிகளவில் கொல்லப்பட்டு வருவதால் இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

13 comments:

 1. அறிந்திராத தகவல் பறவைகளின் புகைப்படங்கள் அருமை பாராட்டுக்கள் .

  ReplyDelete
 2. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க ஆராய்ச்சியாளரா?

  ReplyDelete
 3. இதைத் தமிழில் இருவாச்சி எனக் கூறுவர்.

  ReplyDelete
 4. படங்கள் கொள்ளை அழகு! இந்தப் பறவைகள் ஒரே துணையுடன்தான் இறுதிவரை வாழும்கறது அதிசயத் தகவல். மனித இனம் வேட்டையாடி அழிக்காத பறவையோ வில்ங்கோ உண்டா என்ன? அழிவின் விளிம்பில் இந்தப் பறவையினம் என்பது வேதனையான தகவல். ஆக பல உணர்வுகள் எழுப்பி ரசிக்க வைத்தது உங்க எழுத்து. அதுசரி... மாசத்துக்கு ஒரு பதிவுதான் எழுதணும்னு ஏதாவது விரதமா? நிறைய எழுதுங்க ராஜி!

  ReplyDelete
 5. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
  தூய தமிழ் நாட்காட்டி வாங்க
  அணுகும் முகவரி :
  சின்னப்ப தமிழர்
  தமிழம்மா பதிப்பகம் ,
  59, முதல் தெரு விநாயகபுரம்,
  அரும்பாக்கம் , சென்னை- 600106 .
  அலைபேசி - 99411 41894.

  ReplyDelete
 6. நல்ல தகவல்களை தேடி படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. சில சமயங்களில் இந்த மாதிரி பதிவிற்கு ஹிட் அதிகம் வராது ஆனால் பள்ளி , காலேஜ் , மற்றும் இந்த மாதிரி தகவல்களை தமிழில் தேடி ஆராய்ச்சி செய்யபவர்களுக்கும் மிகவும் உபயோகமானது.. இந்த மாதிரி பதிவுகள் என்றும் உபயோகமாக இருக்கும். இதை எழுதி பகிர்ந்து கொண்டதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  ReplyDelete
 7. -> Vimal : வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி விமல்.

  -> mazhai.net : இல்ல இல்ல.... டிஸ்கவரி சேனல் மற்றும் ஒருசில புத்தகங்களின் மூலம் தெரிந்துகொண்டவை. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

  -> யோகன் பாரிஸ்(Johan-Paris) : நான் இருவாட்சி என கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் புரியவில்லை. எனவே குழப்ப வேண்டாம் என விட்டுவிட்டேன். தகவலுக்கு நன்றி யோகன்.

  ReplyDelete
 8. பறவையின பற்றிய தகவல்கள் வியக்கவைத்தன. நல்லதொரு பகிர்வு!நன்றி!

  ReplyDelete
 9. நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே.இது தமாசு அல்ல.

  ReplyDelete
 10. -> பால கணேஷ் : ரசனைக்கும், தகவலுக்கும் நன்றி சார். ஹ..ஹ..ஹ..ஹா...! விரதமெல்லாம் ஒன்றுமில்லை . நேரத்தை சிக்கனமாக கடைபிடித்து எழுதுவதில்தான் சிக்கல். தங்களின் கருத்து உற்சாகப்படுத்துகிறது.

  -> விழித்துக்கொள் : பயனுள்ள தகவல். நன்றி நண்பரே. முயற்சி செய்கிறேன்.

  -> Avargal Unmaigal : ஆம் நண்பரே. உண்மைதான்.
  மிக்க நன்றி. கருத்திட்டு ஊக்கப்படுதியமைக்கு.

  ReplyDelete
 11. மனிதன்1 February 2013 at 00:52

  பறவைகளும்
  விலங்குகளும்
  கொடுத்துவைத்தவை
  இயற்கையோடு இயைந்துவாழ...
  மனிதன் பாவம்
  அன்பும்கூட செயற்கையாகிப்போனது
  அவனுக்கு.
  சோகத்திலும் சோகம்..
  ஐந்தறிவில் இருந்து
  வாழ்க்கையைக் கற்போம்...
  நன்றி ராஜி..

  ReplyDelete
 12. கவர்ச்சியான வர்ண அமைப்பும் பிரம்மாண்ட உடலழகும் அனைவரையும் கவரச் செய்கிறது.

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. அழகிய அவசியமான உயிரினங்கள் இப்படித்தான் அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கின்றன
  நன்று

  ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.