Thursday, 28 February 2013

வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!!

நாம் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது மிகவும், கவனத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். கண்ணில் படும் பொருளையோ அல்லது விற்பனையாளர் கூறும் பொருளையோ நன்கு விசாரிக்காமல் வாங்கிக்கொள்வது சிக்கலில் முடிந்துவிடும். கலப்படமும், ஏமாற்று வேலைகளும் பெருமளவில் நடக்கின்றன. அது சாதாரண சில்லரைக்கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை பொருந்தும்.
 
உதாரணத்திற்கு சில...
புதிதாக விற்பவர்கள் தங்களின் பொருட்களை விற்பதற்கு மிகவும் புகழ்ப்பெற்ற பெயர்களையே பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை சற்றே உயர்த்தி வைத்திருப்பார்கள். ஆனால் புதிதாய் தொடங்குபவர்கள் அப்படி செய்வது கடினம். எனவே ஏதெனும் ஒரு கடையினை தங்கள் தகுதிக்கேற்றவாறு திறந்துக்கொள்வார்கள். அந்நிறுவனங்களிலிருந்து ஒருசில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு அந்த பொருட்களுடைய Brand-ன் பெயரையோ, முத்திரையையோ தங்களின் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்வார்கள்.  அதை பார்த்ததும் வாங்க சென்றுவிடுவோம்.
நாம் போய் ஒருசில கடைகளில் குறிப்பிட்ட Brand-யை கேட்க்கும்போது அவர்கள் இப்படி கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
சார்/மேடம், நீங்க சொல்ற அந்த Product 2 நாளைக்கு முன்னாலதான் முடிஞ்சிடுச்சி. நாங்க Order பண்ணிருக்கோம். எப்போ வருதுனு தெரியல. இந்த Product எடுத்துக்கோங்க. அதுவும், இதுவும் Same Product தான். Brand Name தான் வெற.  இதனோட விலை கூட 50 ரூபாய் குறைவுதான்.என்பார்கள்.
அதை பற்றிய மதிப்பு அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் விலை மட்டும் கம்மியா இருக்கு? ஒரே Product தானே னு நாம கேட்டா,
ரெண்டும் ஒன்னுதாங்க. ஆனா அந்த Brand Name பிரபலமா  இருக்கிறதனாலதான் விலை அதிகமே தவிர வேறெதுவும் இல்ல என்று கூறுவார்கள்.
இப்படி சொல்லும்போது, யோசிக்காமல் பலர் இதை வாங்குவதுதான் இயல்பு.
ஆனால், உண்மையில் அவர்கள் விற்க நினைப்பது தங்களின் பொருட்களைதான். அந்த பொருட்களை விற்பதை போல பெயரை வைத்துக்கொண்டு இவர்களுடைய பொருட்களைதான் விற்றுக்கொண்டிருப்பார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதிக அளவில் லாபத்தையும் பெற்று, தங்கள் Brand - ன் பெயரையும் பிரபலமாகவும் ஆக்கிகொள்கிறார்கள். அவ்வாறு விற்பதற்காகதான் இது போன்ற பெயரினை பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஒரிஜினலும் இருக்கும், டூப்ளிகேட்டும் இருக்கும். பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். Guarantee, Warranty  நன்கு சரி பார்த்துக்கொள்ளுங்கள்.


இதுபோல சாதாரண மலிகைக்கடைகளில் விற்கப்படும் பொருட்களிலும் கூட கலப்படம் இருப்பதை போல ஏமாற்று வேலைகளும் இருக்கின்றன. தங்களின் சொந்த பொருளை விற்க நினைப்பவர்கள், விளம்பரமெல்லாம் செய்து அதிகமான விற்பனையில் இருக்கும் ஒரு பிரபலமான பொருளை வாங்கிக்கொள்கிறார்கள்.  விற்கும்போது, தங்களின் சொந்த பொருளுக்கும் அதன் பெயரையே பயன்படுத்தி விற்பனை செய்ய தொடங்கி விடுகிறார்கள். 
 
குறிப்பிட்ட நிறுவனத்தின் Brand என்றால் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஏதேனும் ஒரு மூலையில் அதன் பெயரையோ அல்லது லோகோ(Logo)வையோ குறிப்பிடுவது வழக்கம். சொந்தமாக விற்கும் பொருளில் அதுபோன்ற பெயரோ அல்லது லோகோவோ இருக்க கூடாது. ஆனால், ஒருசிலர் பிரபலமான Brand-ன் பெயரை பெரியதாகவும் தங்களின் பெயரை மிகச்சிறியதாகவும் போட்டுவிடுகிறார்கள். பாக்கெட்டின் கவரையும் அதெபோல் அமைத்துக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு விளம்பரங்ளில் காணப்படும் பொருட்களை போன்றே தோன்றும்.  கேட்டால் டை-அப் என்கிறார்கள். நாமும் வாங்கிவிடுவோம். அவர்களின் பொருளும் விற்பனையாகிவிடும். ஆனால் கலப்படம் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அதே சுவை இருந்தாலும், தரமும் அதே போல இருக்கும் என்பது சந்தேகமே.
 
 இது ஒருபுறம் இருக்க, நூதன முறையிலும் ஒருசில ஏமாற்று வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. ஒருசில நிறுவனங்கள் தங்களின் மென்பொருளை விற்க வேண்டுமானால் மற்ற சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று விற்பதில்லை. இவர்களிடம் வேலை பார்க்கும் நம்பகமான ஒருவரை பெரிய பெரிய கம்பெனிகளுக்கு வேலையில் மேனேஜராக அமர்த்துவதற்கு அனுப்பி விடுகின்றனர். அவருக்குத் தேவையான தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு மேனேஜராக தேர்ந்தெடுக்கபட்டுவிடுகிறார்.
எந்த நிறுவனமாக இருந்தாலும் மேனேஜரின் பேச்சுதான் நிச்சயம் எடுபடுமே. அவர் அந்நிறுவனத்தின் முதல்வரிடம் அனுமதி பெற்றால் மட்டும் போதும். அவர் நினைப்பது நடந்துவிடும். அப்பொருளை விற்பதற்காக இப்படி சொல்வார்,
"சார், நம்ம ஆபீஸ்ல Processing எல்லாம் ரொம்ப Slowவா இருக்கு. நான் சொல்ற Software போட்டுட்டா அந்த பிரச்சனையே இருக்காது. நான் இதுக்கு முன்னால இருந்த கம்பெனில அந்த Softwareதான் எல்லோரும் Use பண்றது இந்த Softwareதான். Use பண்றதுக்கு ஈஸியாவும் இருக்கும். வேகமாகவும் பண்ண முடியுது.  அதிகமான வேலையை சீக்கிரமா முடிச்சிட முடியும். அதுல எதாவது பிரச்சனை வந்தாலும் எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. பார்த்துக்கலாம் சார்
இதையெல்லாம் கேட்டவுடன் அவர் சரியென்று சம்மதித்துவிடுவார்.
அப்புறமென்ன? இவர் நினைத்தவாறு அங்கிருக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் Install செய்துவிடுவார். அனைவரும் உபயோகபடுத்த பழகிக்கொள்வார்கள். இவர் சிறிது நாட்கள் சென்றதும்.. வேறு எதேனும் காரணம் காட்டி வேலையிலிருந்து விலகி விடுவார். இப்படியும் நடக்கின்றன.
இவர்கள் அனைவருமே நல்ல பொருட்களையே விற்பதற்கு இம்முறையினை கையாண்டிருக்கலாம். ஆனால் தரமற்றவற்றை விற்பவர்களும் இதையே உபயோகிப்பதால் என்றும் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது தான் நமக்கு நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

11 comments:


 1. வணக்கம்!

  எண்ணங்கள் ஆயிரம் இன்வலைக்கு நான்வந்து
  வண்ணங்கள் ஆயிரம் உண்டுவந்தேன்! - வெண்பாவில்
  பாடி படைக்கின்றேன்! பைந்தமிழ் வாழ்த்துகளைக்
  கோடி படைகின்றேன் கொள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கவிஞரே!

   Delete
 2. அட... சாஃப்ட்வேர் விக்க இப்படி ஒரு வழியும் ஃபாலோ பண்றாங்களா ராஜி! வியப்பான தகவல் எனக்கு. மத்தபடி இதே க்வாலிட்டி, கம்பெனிதான் வேறன்னு மாத்திரைகள் உட்பட பல பொருட்கள்லயும் ஏமாத்தி விக்கறாங்க. நாமதான் உஷாரா இருந்தாகணும். இதில Co-opன்னு சீயக்காய் ஃபேமஸ்னா Coop அப்படின்னு கிட்டத்தட்ட அது மாதிரியே அட்டை ப்ரிண்ட் பண்ணி ஏமாத்தற தைரியமான போலி ப்ராடக்ட்ஸ் அயோக்கியங்களும் இருக்காங்க. நமக்குத் தேவையான விழிப்புணர்ச்சிக்கான அபாய அறிவிப்பை பலமாவே அறிவிச்சிருக்கீங்க. நன்று!

  ReplyDelete
  Replies
  1. இதை நான் சொல்றதவிட நீங்க சொல்லிருந்த இன்னும் Effectiveவா இருந்திருக்கும் கணேஷ் சார்.

   வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே!

   Delete 3. அருமை...

  கவனம் எங்கும் எதிலும் எப்போதும் தேவை...

  ReplyDelete
 4. நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
  நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
  என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
  உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

  பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.

  ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
  என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
  உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
  நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
  என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
  நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

  எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
  தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
  கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
  எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
  நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

  எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
  எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
  பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

  எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
  சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
  என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
  பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

  எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
  கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
  எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
  எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

  இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
  இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
  பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
  அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
  பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
  தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

  களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
  தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
  " நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
  நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"

  ReplyDelete
 5. நாம் பல வகைகளில் ஏமாற்றப் படுகின்றோம் என்பது உண்மை சில இ நேரங்களில் நாமே வலியச் சென்று ஏமாறுவதும் உண்டு

  விளம்பரங்களை நம்பி ஏமாறுவது

  அதிக ஆசையால் ஏமாறுவது (நாம் ஆசைப் படும்போது தான் ஏமாற்றப் படுகின்றோம் ஆசைப் படவில்லையெனில் எந்தக் கொம்பனாலும் நமை ஏமாற்ற முடியாது - இது டிஸ்கவுன்ட் பண்ணுங்க என்று சொல்லும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நான் சொல்வது எப்புடி )

  தெரிந்தவர் நண்பர்தானே பொய்யா சொல்வார் என நம்புவது


  ப்ளாக் நம்பர்களே நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி பிரதி மாதம் 1மற்றும் 15 ஆகிய தேதிகளில் ( மாதம் இரண்டுநாள்) இலவச பயிற்சி அளிக்கின்றது. நுகர்வோர் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ள இந்தியன் குரல் உதவி மையம் கும்பத் காம்ளக்ஸ் 29 ராத்தான் பஜார் பூக்கடைக் காவல் நிலையம் எதிரில் சென்னை 600 003 தொடர்புக்கு தினமும் மாலை 4மணி முதல் 6 மணி வரை 9444305581

  உதவி மையத்தில் உதவி தேவைக்கு மட்டும் அல்ல உதவி செய்யவும் வரலாம் உதவி என்பது நன்கொடை அல்ல உடல் உழைப்பு உங்களுக்கு தெரிந்ததை சொல்லிக் குடுப்பதும் உதவிதான் அத்தகைய உதவி செய்ய விருப்பமுள்ள யாவரும் வரலாம்.

  --
  www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600019

  ReplyDelete
 6. இந்தப் பதிவு பாராட்டப்பட வேண்டியதும் அனைவரும் அறிந்துகொள்ளவும் வேண்டிய விழிப்புணர்வு பதிவாகும் இது போன்ற பதிவுகளை நாம் பகிர்வதன் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கின்றது இது போன்ற பதிவை எழுதியமைக்காக தோழியை பாராட்டுகின்றேன்

  ReplyDelete
 7. நுகர்வோர் விழிப்புணர்வு தரும் பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.