பொதுவாகவே நிறைய பேருக்கு அவங்களோட பெயரே அவங்களுக்கு பிடிக்காது. ஒருசிலருக்கு பெரிய பெயரா இருக்குன்னு கோபம் வரும். ஒருசிலர் ரொம்ப பழைய பெயரா இருக்கேன்னு வருத்தபடுவாங்க. (என்னுடைய பெயரும் பழசுதாங்க. என்ன பண்றது..? ) இன்னும் ஒருசிலர் பெரிய பெயரா இருந்தாலும் பரவாயில்ல. சுருக்கி கூப்பிடுற அளவுக்காவது இருக்கணும்னு சொல்லுவாங்க. அதிலும் ஒருசிலர்கிட்ட போய் உங்க பெயர் என்னன்னு தெரியாதனமா கேட்டுட்டா போதும். ஆரம்பிச்சிருவாங்க "ராஜாதி ராஜ ராஜ கம்பீர"ன்னு. அப்புறம் சொல்லுவாங்க இதுமாதிரிதான் என் பெயரும் ரொம்ப பெரியதுன்னு.
இந்த மூன்றுகாரணங்களும் இல்லாம நமக்குபிடிக்காதுன்னு சொல்ற பெயரெல்லாம் பொதுவா, நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களில்சிறப்பாவழாதவங்களோட பெயரா இருக்கும். அவங்க ஏதாவது தப்பு பண்ணியிருக்கலாம். அல்லது அவர்களின் குணங்கள் சரியில்லாமல் இருந்திருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஒருவர் நல்ல விதமா வாழ்ந்திடடா அவங்க பெயர் பிடிக்கும். இல்லைன்னா பிடிக்காது.
பெயர் பெரியதோ, சிறியதோ நாம நடந்துக்கிற விதத்தில்தான்அதற்கானமதிப்பேஇருக்கும். அதே மாதிரி சிறப்பா வாழ்ந்து காட்டிய நவீன ஓவியங்களின் தந்தை என வர்ணிக்கப்படுபவரின் முழுப்பெயர்தான் இது. படிச்சு பாருங்க.
பாப்லோ டியேகோ ஜோசே பிரான்சிஸ்கோ டி பௌலா ஜூவான் நெப்போமுசெனோ மரியா டி லோஸ் ரெமெடியோஸ் சிப்பிரியானோ டி ல சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீஸ் இ பிக்காசோ
(Pablo Diego Jose Francisco de Paula Juan Nepomuceno Maria de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso)
பாரேன் இந்த புள்ளக்கு இத்தன அறிவு இருந்திருக்கு !!!!( 7G ரெயின்போ காலனி விஜயன் மாதிறி படிக்கவும்!!!)
ReplyDeleteவாங்க வாங்க... குறை ஒன்றும் இல்லை !!!
ReplyDeleteஅது சரி. நீங்க ஏன் இப்போ அதிகமா எழுதறதே இல்ல?