Tuesday, 28 August 2012

நட்பு வேண்டும்...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க

ஒரு நட்பு...


 குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட

ஒரு நட்பு...


காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற
ஒரு நட்பு...


வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க
ஒரு நட்பு...


முதிர்ந்த பின்

அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது

தோள்களில் சாய
நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ
நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

11 comments:

  1. Onnum sollurathukku illa raji. Mothathulaa uruppadara vali illanu ninaikkuren.

    Nice.kavithai.

    ReplyDelete
  2. நட்பு வேண்டி எழுதப்பட்ட நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி கோபால் சார்
    (தங்களை எவ்வாறு அழைப்பது?..)

    ReplyDelete
  4. //ஆர்.வி. ராஜி கூறியது...
    மிக்க நன்றி கோபால் சார்
    (தங்களை எவ்வாறு அழைப்பது?..)//

    தங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

    மகிழ்ச்சியே!

    ReplyDelete
  5. அருமை.. நட்பு குறித்தான கவிதையைப் படித்ததிலிருந்து, நட்பின் அருமையை விளங்கிக்கொள்ள முடிந்தது..

    ReplyDelete
  6. தங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

    மகிழ்ச்சியே
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    நன்றி கோபால் சார்.

    ReplyDelete
  7. அருமை.. நட்பு குறித்தான கவிதையைப் படித்ததிலிருந்து, நட்பின் அருமையை விளங்கிக்கொள்ள முடிந்தது..
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    அதை நான் எழுதல. இருப்பினும், ஆதரவிற்கு மிக்க நன்றி பழனி.

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.