Thursday, 25 October 2012

அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சில ஆலோசனைகள்..!


அமைதியாய் இருங்கள்...
    ஊமையாகி விடாதீர்கள்..!

சிக்கனமாய் இருங்கள்...
   கஞ்சனாய் இராதீர்கள்...!

ஒய்வு எடுங்கள்...
    சோம்பேறியாகி விடாதீர்கள்..!

அடக்கமாய் இருங்கள்...
    அடிமையாகி விடாதீர்கள்..!

தன்னம்பிக்கையுடன் இருங்கள்...
   கர்வம் கொள்ளாதீர்கள்..!

ஆசை படுங்கள்...
    பேராசை கொள்ளாதீர்கள்..!

செலவு செய்யுங்கள்...
    ஊதாரியாகி விடாதீர்கள்..!

ஆலோசனை கூறுங்கள்...
   அடிமையாக்கி விடாதீர்கள்..!

விட்டுக் கொடுங்கள்...
    ஏமாந்து விடாதீர்கள்..!

சுறுசுறுப்பாய் இருங்கள்...
  அவசரப் படாதீர்கள்...!

பணிவுடன் இருங்கள்...
   கோழையாகி விடாதீர்கள்..!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


11 comments:

  1. ஒவ்வோரும் மனதில் பதியவைக்கவேண்டிய வரிகள்...

    பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சௌந்தர்.

      Delete
  2. அருமை. எஙகளின் பாராட்டுகளை நிறையப் பெறுங்கள், கர்வியாகி விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹ..ஹ..ஹ..ஹா...
      இது ஆலோசனையா? கட்டளையா சார்?

      Delete
    2. ஆலோசனை தான் ஃப்ரெண்ட். நான் யாருக்கும் கட்டளையிடற அளவுக்கு பெரிய மனுஷன் இல்லீங்கோவ்...

      Delete
    3. எப்படி கூறியிருந்தாலும் நல்லதாக இருப்பதனால் ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே. நன்றி..!

      Delete
  3. இரண்டிற்கும் வரிகளுக்கு இடைப்பட்டதே வாழ்க்கை வாழும் வழி !நல்ல பதிவு

    ReplyDelete
  4. 11 பதினொரு ஆலோசனைகள் வழங்கியிருக்கீங்க.

    பாதி படிச்சுட்டேன். மிச்சத்தையும் படிச்சுட்டுக் கருத்து சொல்றேங்க.

    நான் ஒரு சோம்பேறிங்க!!!

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹ..ஹா...
      அப்போ நீங்க 3-வது பாயிண்ட் சரியா படிக்கலைனு நினைக்கிறேன்.

      Delete
  5. நல்ல ஆலோசனைகள்

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.