Thursday, 25 October 2012

சிறந்த ஆயுதம்தானுண்டோ???

எதையெதையோ அழிக்க உலகில்
ஆயுதங்களும் கருவிகளும் இருக்கின்றனவே.
என்னவனே............................!
என்னை அழிக்காமல்...
உன் நினைவுகளை மட்டும் அழிக்கும்
ஏதேனும் ஆயுதம்தான் இவ்வுலகிலுண்டோ?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

19 comments:

  1. ஆயுதம் ஒன்று நினைவுகள் அகற்ற;
    வையகத்தில் இல்லை.
    அப்படி ஒரு ஆயுதம் ஒன்று உண்டாகின்
    வையகம் இல்லை.
    ஒரு பிரளயம் தான்.
    சிலருக்கு
    ஆண்டவனின் நினைவு.
    சிலருக்கு
    பொருள் சேர்க்கும் நினைவு.
    சிலருக்கு
    உலகைக் காக்கும் நினைவு.
    சிலருக்கு
    இன்னல் தீர்க்கும் நினைவு.
    சிலருக்கு
    அல்லல் தீர்க்கும் நினைவு.
    நினைவுகளும் கனவுகளும்
    தான்
    வையகத்தின் இயக்கம்.

    ReplyDelete
    Replies
    1. யப்பப்பப்பா.... பிண்றிங்க சார்.

      Delete
  2. நிச்சயமாக இல்லை
    அருமையான வித்தியாசமான சிந்தனை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  3. ம்ம்ம் நல்ல சிந்தனை.

    ReplyDelete
  4. //நினைவுகளை மட்டும் அழிக்கும்
    ஏதேனும் ஆயுதம்தான் இவ்வுலகிலுண்டோ?///

    தமிழன் என்ற ஆயுதம் நினைவுகளை அழிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம்... :-)
      >>>>>>>>>>>>>>>>

      கருத்திற்கு நன்றி தோழா.

      Delete
  5. இருந்தா சொல்லுங்க சிறப்பான கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சொல்றேன்.

      கருத்திற்கு நன்றி தோழி.

      Delete
  6. இந்நினைவுகள் காலம் கடந்தும் வாழ்பவை...

    நினைவுகள் போயின் இங்கே காதல் ஏது... தோழி...

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம்ம்ம்.. இதை Mind-ல வச்சிகிறேன் நண்பரே.
      நன்றி!

      Delete
  7. அது சரி... அவன் அல்லது அவள் இல்லாட்டாலும் நினைவுகளாவது இருக்கட்டுமேன்னு தானே எல்லாரும் நினைப்பாங்க. இந்த ரிவர்ஸ்தாட் புதுசா இருக்கே? ஆனாலும் நல்லாத்தேன் இருக்குது-

    ReplyDelete
  8. ஆழ்ந்த உறக்கத்தில் நினைவுகள் இல்லை.
    இது தற்காலிக நிலை மட்டும்தான்

    நினைவுகள் இல்லாமல் இருக்க
    நிகழ் காலத்தில் மட்டும் வாழ்தல்

    எந்த செயலையும் உடனே மறந்துவிடுதல்

    மனதில் குவிந்துள்ள பழைய நினைவுகளை தியானத்தின் மூலம் நீக்குதல்.

    புதிய நினைவுகளை மனதில் பதிய வைக்காமல் இருத்தல்

    நினைவுகள் முழுவதும் அழிந்துவிட்டால் மனம் என்ற ஒன்று இல்லை.
    ஆன்மா மட்டுமே இருக்கும்
    இது நான் சொல்லவில்லை பகவான் ரமணர் சொன்னது.
    முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

    ReplyDelete
  9. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.