Tuesday 30 October 2012

நலமா? நீ நலமா?

எங்கோ ஒரு மூலையில்...
யாருக்கோ பிறந்து...
ஏதோவொரு பெயரில்....
ஏதோவொரு வேலையில்....
எனக்காக வாழ்ந்துக்கொண்டிருக்கும் என்னவனே!
இப்போது...
உன்னலனிற்காக நானென்ன செய்வேன்
இறைவனை வேண்டுவதைத்தவிர.

விரவில் வந்துவிடு....
உன் நிழலையும் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாமல்
நானிருப்பேன்
வெளிச்சமாய் உன்னுடன் வாழ!!!


உன் கவலைகளையும், கஷ்டங்களையும்
இப்பொதே இன்முகத்துடன் அனுபவித்துவிடு.
நீயும் நானும் நாமானதும், அவையெல்லாம்
நிதானித்து ஒத்திகை பார்ப்பதற்கு கூட
உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


19 comments:

  1. நலமா? நீ நலமா?

    அழகிய தலைப்பு. அருமையான கவிதை.
    நல்லதொரு நேர்மறையான எதிர்பார்ப்பு.

    வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமை,
      அழகான எதிர்பார்ப்பு,
      வாழ்த்துக்கள் ராஜி...

      Delete
    2. மிக்க நன்றி கோபால் சார். முதலில் இதையும் ஒரு கவிதையாக ஏற்றுகொண்டதற்கு. எனக்கு கவிதையே எழுத தெரியாது.

      வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. வாழ்த்திற்கு மிக்க நன்றி துரை. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  3. படைப்பாளியின் உணர்வை
    படிப்பவரும் உணரச் செய்யும் எல்லாமே
    கவிதைதான்
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வாழ்த்தும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ரமணி சார். மிக்க நன்றி.

      Delete
  4. நீங்க கவிதை எழுத வராதுன்னு சொல்லிட்டு உங்க உணர்வுகளைக் கடத்துற மாதிரி கவிதை எழுதிட்டீங்க. நன்று. நான் கவிதை எழுதாம இருக்கறது மக்களுக்குச் செய்யற பெரிய சேவைன்னு நினைக்கறதால... எழுதறதே இல்ல, ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. அடடடடா....! பிரபல எழுத்தாளர்களுக்கே உரிய தன்னடக்கம் இதுதானோ?

      இருப்பினும் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே!

      Delete
  5. நியாயமான எதிர்பார்ப்பு !

    ReplyDelete
  6. அருமை, வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன் சார். வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  7. கவிதையை ரசித்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள்,

    "நிதானித்து ஒத்திகை பார்ப்பதற்கு கூட
    உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!" இந்த வரி கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது.

    ReplyDelete
    Replies
    1. அச்சோ!
      சரி..சரி.. விடுங்க..விடுங்க..!

      Delete
  8. மிக அருமையான வரிகள்...பிரிவின் தாக்கத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்..

    ReplyDelete
  9. ஹலோ ஃப்ரண்ட்... எங்க கருத்துப் பெட்டில மட்டும் பாக்க முடியுது. தளத்துல காணம்? சீக்கிரம் வாங்க. உங்களுக்கு அட்வான்சா என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல்ல ஃப்ரண்ட்.. அலுவலக பணி அதிகம். பாவம்தானே நான்?


      வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி. தங்களுக்கும் அப்படியே. என்னை வாழ்த்திய முதல் நண்பர் தாங்களே. மிக்க மகிழ்ச்சி.

      Delete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.